கொரோனா நிதியாக ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கொரோனா நிதியாக ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் 70 கோடி ரூபாய் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடத்தூர், ஆண்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே யூடியூப் மூலம் பாடம் படிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.