கொரோனா தடுப்பு பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 6 April 2020

கொரோனா தடுப்பு பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

   

   சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 45 ஜே ஆர் சி ஆலோசகர்கள், 15 சாரணர் இயக்க ஆசிரியர்கள்,
10 தன்னார்வம் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர்கள்  முழு அர்ப்பணிப்புடன் கொரோனா தடுப்பு பணிகளில் சேவை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண் ஆலோசகர்கள் முனைப்புடன் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரேஷன் கடைகளில் பணியாற்றிவரும் JRC ஆலோசகர் பெருமக்களுக்கும் , சாரண சகோதரர்களுக்கும்  இந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரெட் கிராஸ் சார்பாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக இப்பணிகளை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.மதன்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வாழ்த்தும்,பாராட்டும் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி.ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் செய்திருந்தார்.