மத்திய அரசு அவசரசட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




22/04/2020

மத்திய அரசு அவசரசட்டம்


புதுடில்லி: டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக, கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. டில்லியில் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்கள், நர்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக டாக்டர்கள் புகார் அளித்தனர்.
உ.பி., மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்ட நபரின் உறவினர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த டாக்டர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் டாக்டர்கள் காயமடைந்தனர்.
சென்னையிலும் கொரோனா சிகிச்சையின் போது, அந்த வைரஸ் தாக்கி உயிரிழந்த டாக்டர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்நிலையில், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டால்,
அவர்களுக்க 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: டாக்டர்களை தாக்கி கடுமையான காயம் ஏற்படுத்தினால், குற்றவாளிக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், 1 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சுகாதார பணியாளர்கள், கொரோனா தொற்றில் இருந்து நாட்டை காக்க போராடுகின்றனர்.
எதிர்பாராத விதமாக அவர்கள் மீது தாக்குதுல் நடத்தப்டுகிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களை ஏற்று கொள்ள முடியாது.
இதனை தடுக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த உடன் அமல்படுத்தப்படும்.
இதற்காக 1897 ம் ஆண்டு தொற்று நோய் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம். விசாரணை 30 நாட்களில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459