பேஸ்புக்கில் புதிய அறிமுகம் ; - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 26 April 2020

பேஸ்புக்கில் புதிய அறிமுகம் ;

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளது.
வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் போது , வீடியோ காலில் பேச புது வசதியை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
அந்த புது அம்சம் என்னவென்றால் ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ சாட்டிங் செய்யும் அப்டேட்டை பேஸ்புக் விரைவில் வழங்கும் என மார்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்ததாவது, ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ சாட் செய்யும் வசதியை பேஸ்புக் வழங்க முயற்சித்து வருகிறது. பேஸ்புக்கில் அனுப்பட்ட இணைப்பு மூலம் ஒருவருக்கொருவர் இணைந்து பேசாலாம்.


பேஸ்புக்கில் இருப்பவர்கள் மட்டுமே சாட்டில் இணைய முடியும். தேவையற்ற நபர்கள் வீடியோ சாட்டில் வருவதை தவிர்க்க கிரிப்டோகிராபர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வரும் வாரங்களில் விரைவில் வீடியோ சாட் அறிமுகம் ஆகும் என தெரிவித்துள்ளார்.