ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி


மாஸ்கோ, 
உலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2,31,310 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா வைரசால் 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,498 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 8-வது இடத்தில் உள்ளது. 
இந்நிலையில் ரஷ்ய பிரதமர் மிக்கைல்
மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இது குறித்து ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கூறுகையில், கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.