கொரோனாவை அடியோடு அழிக்க புதிய தடுப்பு நடவடிக்கை : தொடர்ந்து மாஸ் காட்டும் கேரளா - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 16 April 2020

கொரோனாவை அடியோடு அழிக்க புதிய தடுப்பு நடவடிக்கை : தொடர்ந்து மாஸ் காட்டும் கேரளா
பிற நாடுகளை காட்டிலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும், கொரோனாவை முழுவதும் அழிக்கும் முயற்சியில் இந்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக கேரள அரசின் நடவடிக்கைகள், கொரோனாவை பெருமளவில் கட்டுப்படுத்தி இருப்பது, பிற மாநிலங்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஆரம்பத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்த கேரளா,
தகுந்த நேரத்தில் எடுத்த முயற்சிகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து இன்று 9 வது இடத்தில் இருக்கிறது. இப்படி நல்ல முன்னேற்றம் இருந்தபோதிலும்,
லேசில் விட்டுவிடாது, தடுப்பு நடவடிக்கைகளில் தங்களது தீவிரத்தை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில்,கேரளாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை வழங்க ஆழப்புழாவில் உள்ள படகு வீடுகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆழப்புழா மாவட்ட கலகெ்டர் அஞ்சனா கூறுகையில், ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள்,
தங்கும் விடுதிகளை தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தேவைப்பட்டால் ஆழப்புழாவில் உள்ள படகு வீடுகளையும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உள்ளோம். இதற்கு படகு உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்தனர். படகு வீடுகள் மூலம் ஒரே நேரத்தில் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை தனிமைப்படுத்தி தங்க வைக்க முடியும்’ இவ்வாறு அவர் கூறினார்.