சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படிக் கண்டறிவது ? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படிக் கண்டறிவது ?


கொரோனா பரவிவரும் இந்தச் சூழலில் ஒருவர் புரையேறி இருமினால்கூட அருகில் இருப்பவர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்கிறது. சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படிக் கண்டறிவது என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

Corona

விகடனின் கொரோனா அப்டேட்ஸ் பக்கத்தில் பிரபாவதி என்ற வாசகி, “எனக்கு ஒவ்வாமையால் ஏற்படும் இருமல் பிரச்னை இருக்கிறது. சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படித் தெரிந்துகொள்வது… சாதாரண இருமல்தான் என்று உறுதிப்படுத்த பரிசோதனைகள் தேவையா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
வாசகரின் இந்தச் சந்தேகத்துக்குப் பதிலளிக்கிறார் நுரையீரல் மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர்.
“கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் கூட்டாக இருப்பவை. காய்ச்சல்தான்
பிரதான அறிகுறியாக உள்ளது. பின்னர் வறட்டு இருமல், உடல் வலி, மூச்சிரைத்தல் ஆகியனவும் சேர்ந்து இருக்கும்.

மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர்


தற்பொழுது நம் நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் நிலையில் உள்ளது. ஆதலால் இருமல் இருந்தாலே பரிசோதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்தவர்கள், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இருமல் இருந்தால் பரிசோதித்துக் கொள்ளலாம்.
Also Read:
இன்னும் நாம் சமூகப் பரவல் என்ற நிலையை அடையாத காரணத்தால் காய்ச்சல் மற்றும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருமல் மட்டும் இருக்கிறது என்றால் பரிசோதனை அவசியம் இல்லை.

cough

வீட்டினுள் பத்திரமாக இருப்பவர்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்களுக்கு இருமல் வந்தால் பயப்படத் தேவையில்லை. ஒவ்வாமை பிரச்னையால் இருமல் தொந்தரவு இருந்தாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என்றால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்கிறார்.