வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் நவீன முகக்கவசத்தை தயாரித்தது இந்தியா - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 14 April 2020

வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் நவீன முகக்கவசத்தை தயாரித்தது இந்தியா


அகமதாபாத் : வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் சிறப்பு முகக்கவசத்தை குஜராத்தின் CSMCRI-ஐச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க முகக் கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் CSMCRI-ஐச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறப்பு முகக் கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்கொள்ளும் வகையில் மெம்பரேன் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த முகக் கவசத்தை வடிவமைத்துளனர்
. இதன் முன்புறத்தில் படியும் வைரஸ், பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் வகையில் சிறப்பு மூலப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த முகக் கவசம் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுபற்றி CSMCRI-ஐச் சேர்ந்த விஞ்ஞானி ஷாகி என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் பேசுகையில் இதுவொரு மிகச்சிறந்த தயாரிப்பு.இதன் வெளிப்புறம் வைரஸ், பூஞ்சை, பாக்டீரியாவை அழிக்கும் வகையில் பாலிசல்போன் மூலப்பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தடிமன் 150 மைக்ரோ மீட்டர். அதாவது முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் படியும் 60 நானோ மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட எந்தவொரு நுண்ணுயிரியும் கொல்லப்படும்.
கொரோனா வைரஸின் விட்டம் 80-120 நானோ மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இது N95 முகக்கவசங்களை விட மேம்பட்ட ஒன்றாக இருக்கும் என்றார். இந்த முகக் கவசத்தை தயாரிக்க குறைந்த செலவே ஆகிறது.
அதாவது மார்க்கெட்டில் ரூ.100-300 வரை விலை கொண்ட முகக் கவசங்கள் விற்கப்பட்டு வரும் நிலையில், இதன் தயாரிப்பு செலவு ரூ.25 முதல் ரூ.45 மட்டுமே ஆகிறது.
பவ்நகரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் 5 விதமான முகக் கவசங்களை உருவாக்கியுள்ளது.இது மெம்பரேன், கோட்டட் பேப்ரிக்ஸ் உடன் பல்வேறு அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக இந்த முகக் கவசத்தை விநியோகம் செய்ய CSMCRI நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் முகக் கவசத்திற்கு மருத்துவ ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.