ரேபிட் கிட் தயாரித்து கேரளா சாதனை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 18 April 2020

ரேபிட் கிட் தயாரித்து கேரளா சாதனை


கொரோனா பாதிப்பு இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் விரைவாக அதிக மக்களுக்கு சோதனை செய்வதே இதுபோன்ற நோய்களைக் கையாளுவதில் உகந்த முறையாக இருக்க முடியும்
. ஆனால், இந்தியாவில் விரைவாகச் சோதனை செய்வதற்கு உகந்த டெஸ்க் கிட்கள் போதுமான அளவில் இல்லை.
இந்நிலையில், சீனாவிலிருந்து வாங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவை அமெரிக்காவுக்குத் திருப்பி விடப்பட்ட தகவல்களும் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இந்தியா பி.சி.ஆர். எனப்படும் வேறொரு சோதனை முறைக்கு மாறியது. அதேசமயம், ரேபிட் டெஸ்க் கிட்கள் வரவுக்காக காத்திருக்கவும் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம்
கொரோனா சோதனை செய்வதற்கான ரேபிட் டெஸ்ட் கிட்களை உருவாக்கியுள்ளது.
இந்த டெஸ்ட் கிட் மூலம் 2 மணி நேரத்திற்குள்ளாக முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,
இந்தத் தகவலை மக்களிடம் மகிழ்ச்சிகரமாகப் பகிர்ந்துள்ளார்.
10 நிமிடங்களில் சோதனை செய்து 2 மணி நேரத்திற்குள் முடிவுகளை அறிந்துகொள்ள உதவும் இந்த சோதனைக் கருவி குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வரலாகப் பரவி வருகிறது.