மே மாத மத்தியில் இந்தியாவில் பரவுவது அதிகரிக்கும் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 23 April 2020

மே மாத மத்தியில் இந்தியாவில் பரவுவது அதிகரிக்கும்


மே மாத மத்தியில் இந்தியாவில் பரவுவது அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் நெட்வொர்க் பத்திரிகை குழுமம்ஆய்வு நடத்தி இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா,இத்தாலியில் நேரிட்ட கரோனாவைரஸ் பாதிப்பை அடிப்படையாக கொண்ட சதவீத மதிப்பீடுஉள்ளிட்ட 3 மாதிரிகளை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் மே மாதம் 22-ம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என கூறப்பட்டுள்ளது.கரோனா வைரஸின் முன்னேற்றத்தை கணிக்க மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாதிரியும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் எவ்வாறு கரோனா பரவும் என்பதற்கான மதிப்பீடுகள் வழங்கப்பட்டன.
இந்த நெருக்கடிக்கு அரசும், சுகாதார உள்கட்டமைப்பும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான வழிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒருவேளை மே 15-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால், செப்டம்பர் 15-ம் தேதி கரோனா பாதிப்பு பூஜ்யமாக குறைய வாய்ப்புள்ளது என்றும், மே 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால் ஜூன் மாத மத்தியில் அது பூஜ்யமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.