பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள கபசுர குடிநீர் குடிக்கலாம் - தமிழக அரசு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 23 April 2020

பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள கபசுர குடிநீர் குடிக்கலாம் - தமிழக அரசுபொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. 
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் மற்றும் போலீஸாருக்கு கபசுர குடிநீரை முதல்வர் பழனிசாமி வழங்கினார். 
மேலும், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் கரோனா சிகிச்சைக்காக அல்ல,
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டும் உதவும். கரோனா சிகிச்சை பெற்றவர்கள் தொடர்ந்து உடல்நலத்தை பேணவும் இது பயன்படும் என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.