முகரும் திறனை இழப்பதும் கொரோனாவின் புதிய ஆறு அறிகுறிகளில் ஒன்று - ஆசிரியர் மலர்

Latest

 




27/04/2020

முகரும் திறனை இழப்பதும் கொரோனாவின் புதிய ஆறு அறிகுறிகளில் ஒன்று


நியூ யார்க்: தசை வலி, ருசி மற்றும் முகரும் திறனை இழப்பது உள்ளிட்ட ஆறு புதிய கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கடுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதித்தவர்களுக்கான அறிகுறிகளின் பட்டியலில், அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிதாக ஆறு அறிகுறிகளை சேர்த்துள்ளது.
ஏற்கனவே, குளிர், குளிரால் ஏற்படும் நடுக்கம், தலைவலி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை கரோனா அறிகுறி பட்டியலில்
ஞாயிற்றுக்கிழமை இணைக்கப்பட்டுள்ள நிலையில், தசை வலியும், ருசி மற்றும் முகரும் திறனை இழப்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது..

முன்னதாக, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவைதான் கரோனா அறிகுறிகள் என்று கண்டறியப்பட்டிருந்தது. இவை கரோனா தொற்று பரவி 2 முதல் 14 நாட்களுக்குள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில்லாமல், மூச்சு விடுவதில் சிரமத்துடன், தொடர்ந்து வலி, நெஞ்சுப் பகுதியில் அழுத்தம், மனக் குழப்பம் அல்லது எழ முடியாமல் திணறுதல், உதடுகள் அல்லது முகம் நீல நிறமாகுதல் போன்றவையும் கரோனா பாதிப்பின் தீவிர அறிகுறிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இருக்கும் அனைத்தும் கரோனாவுக்கான
அறிகுறிகள் அல்ல என்றும், இதில் ஏதேனும் இரண்டு விஷயங்கள் தீவிரமாக இருக்கும் போது மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், அறிகுறியே இல்லாத கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதும், சிகிச்சை அளிப்பதுமே மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459