ஆன் லைனில் வகுப்பு : அசத்தும் கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆன் லைனில் வகுப்பு : அசத்தும் கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகள்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வருவதால் தேர்வுக்கு படித்த மாணவர்களுக்கு
பாடங்கள் மறந்துபோகாமல் இருக்க,
கன்னியாகுமரி
மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகளும், நாகர்கோவிலை சேர்ந்த மென்பொருள் நிறுவனமும் இணைந்து நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் அரசுப் பள்ளி போன்ற பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பாடம் எடுக்கும் முயற்சியை முதன்முதலாக முன்னெடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்துக்கு வந்து இறங்கிய 2,600 டன் ரேஷன் அரிசி..!
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக படங்களை எடுக்க ஆன்லைன் மூலம் மென்பொருள் ஒன்றை இந்த மென்பொருள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மென்பொருள் நிறுவன நிர்வாகி கூறும்போது,
“அனைத்து வகையான பாடங்களையும் இந்த புதிய தொழில்நுட்ப முறையில் ஆசிரியர்களே வீடுகளில் இருக்கும் மாணவ, மாணவியர்களிடம் காணொளி காட்சி மூலம் சொல்லி கொடுத்து வருகின்றனர்.
நாகர்கோவிலில் அரங்கேறிய அரிசி பிராண்ட் மோசடி!
ஏற்கெனவே தனியார் பள்ளிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டு வந்த நிலையில்,
கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறோம்” என அவர் கூறினார்.
பத்தாம் வகுப்பு தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதனை மாணவ, மாணவியர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் விதத்தில் ஆசிரியர்கள் அவர்களை ஆன்லைன் கற்பித்தல் முறையில் தயார்படுத்தி வருகின்றனர்.