ஊதிய உயர்வு கேட்டு போராடிய அரசு மருத்துவர்களின் இடமாறுதல்களை ரத்துசெய்யுங்கள் : முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த குழந்தைகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 16 April 2020

ஊதிய உயர்வு கேட்டு போராடிய அரசு மருத்துவர்களின் இடமாறுதல்களை ரத்துசெய்யுங்கள் : முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த குழந்தைகள்


 நெடுந்தொலைவில் பணிபுரியும் தங்கள் தந்தையை மீண்டும் பழைய இடத்திற்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என மருத்துவர்களின் குழந்தைகள் உருக்கமான வீடியோ வெளியிட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் சுமார் 120 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக, அவர்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால் குடும்பம், குழந்தைகளை விட்டு பணியாற்றி வந்த அவர்கள் தற்போது கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதால், அவர்களால் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குழந்தைகள்,
தங்கள் தந்தையை முன்பு பணியாற்றிய இடத்திற்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என உருக்கமாக கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
 அந்த வீடியோவில்  ஒரு குழந்தை கூறும் போது,  “ குட் மார்னிங் சிஎம் சார் எங்க அம்மாவ திண்டுக்கல்லுக்கு இடம் மாத்திட்டாங்க, அதனால்  நீங்க எங்க அம்மாவ அவங்க பணிபுரிந்த பழைய இடத்துக்கே மாத்திடுங்க என்றும் இன்னொரு குழந்தை கூறும் போது “ வணக்கம் சிம் சார் எங்க அப்பாவ பழைய இடத்துக்கே மாத்திருங்க” என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.