அரசு, தனியார் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 1 May 2020

அரசு, தனியார் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு


சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்
பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று மேலும் 138 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். 

மே 2ஆம் தேதிக்குள் பள்ளிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகரட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.