அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா? முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

 




05/04/2020

அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா? முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.
எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு
முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனது பணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்த பின், பிரதமர் மோடி வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா படேல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ்,
அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், மு.க.ஸ்டாலின், பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார்.
பிரதமர் மோடி தற்போது அனைத்து தலைவர்களையும் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்துவதன் மூலம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? அல்லது அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா? என்ற சந்தேசகம் எழுகிறது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459