வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அவ்வாறு அணிந்து வராவிட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன், ஒருபகுதியாக, மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, வீட்டில் இருந்து வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசக் அணிந்திருக்க வேண்டும் என டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. சண்டிகர் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள 20 பகுதிகளுக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது. மார்கஸ் மஸ்ஜித், நிசாமுதின் பஸ்தி உள்ளிட்ட 20 இடங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பகுதிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதிகளில் மக்கள்  வீட்டை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை அரசே வீடு தேடி வந்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வீட்டைவிட்டு வெளியே வரும் பொதுமக்கள் இனி கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும்
. அப்படி முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை விதிக்கப்படும் அல்லது விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
www.Asiriyarmalar.com