5 வருடமாக ரகசிய திட்டம் :டிஜிட்டல் கரன்சிக்கு மாறிய சீனா ! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 25 April 2020

5 வருடமாக ரகசிய திட்டம் :டிஜிட்டல் கரன்சிக்கு மாறிய சீனா !


பெய்ஜிங்
திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அணு ஆயுதமோ, வேறு எந்த ஆயுதமோ இல்லாமல் கிருமி மூலமாக சீனா மூன்றாம் உலக போரை தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.
ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்காவே இந்த கொரோனா தொற்று நோயால் 50 ஆயிரம் பேரை பறிகொடுத்து விட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மண்டியிட வைப்பதுடன் அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை வளர்த்துக் கொள்ள சீனா வைரசை பரப்பியிருப்பதாக கிரகாம் ஆலிசன் என்ற அரசியல் அறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பயன்படுத்தி, உலகப்பொருளாதாரத்தில் சீனா, கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றே கூறலாம்.இது வெறும் கணிப்பு மட்டும் கிடையாது, சில உதாரணங்கள் இருக்கின்றன.
உலகநாடுகள் முடங்கி கிடக்கின்றன, இந்த நேரத்தில் சீனா தன்னுடைய சுற்றுலாத்தளங்களை திறந்துவிட்டுள்ளது. மால்கள்,ஓட்டல்கள் என அனைத்தும் திறக்கப்பட, மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பிவிட்டது.பெரும்பாலான தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு வந்துவிட்டன.
சீனா அரசு 344 பில்லியன் டொலர்களை பொருளாதாரத்தில் இருந்து மீட்க முதலீடு செய்துள்ளனர்.
சீனா தற்போது தங்கள் நாட்டிற்குள் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.ஆம் சீனாவில் மத்திய வங்கிகள் எல்லாம் சேர்ந்து இப்படி டிஜிட்டல் பணத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
உலகம் முழுக்க பிட் காயின்கள் நிறைய உள்ளது. ஆனால் ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இந்த டிஜிட்டல் கரன்சி என்பது உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக இந்த டிஜிட்டல் கரன்சிக்கு என்று தனியாக வேலட் ஒன்று அளிக்கப்படும்.
அதில் இந்த பணத்தை வைத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு டிஜிட்டல் கர்ன்சி எலக்ட்ரானிக் பேய்மெண்ட்  (DC/EP) என்று சீனா பெயர் வைத்துள்ளது.
இது சீனா யென் பணத்தின் டிஜிட்டல் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  திட்டத்தை ஐந்து வருடங்கள் ரகசியாக போட்டு, தற்போது சீனா நிறைவேற்றி உள்ளது என்று கூறுகிறார்கள். மிகவும் ரகசியமாக இந்த திட்டத்தை சீனா செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பணம் கொண்டுவருவதற்கு  நிறைய காரணம் சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக சீனாவில் இருக்கும் பணம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.சீனா மொத்தமாக இந்த நோட்டுகளை கிருமி நீக்கம் செய்துவிட்டது.
ஆனாலும் இனிமேல் பணம் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது. இதை தடுக்கும் விதமக சீனா இப்படி டிஜிட்டல் கரன்சி பக்கம் செல்ல போகிறது என்கிறார்கள்.
அதோடு மற்ற உலக நாடுகளுடன் சீனா இதேபோல் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த திட்டமிடுகிறது என்கிறார்கள். தற்போது உலகம் முழுக்க வர்த்தகத்திற்கு அதிகமாக அமெரிக்க டொலர் தான் பயன்படுத்தப்படுகிறது.
இதை எப்படி மாற்றுவது என்று சீனா இத்தனை வருடங்களாக யோசித்து வந்தது. தற்போது கொரோனா காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா டிஜிட்டல் கரன்சியை களமிறக்கி உள்ளது என கூறப்படுகிறது