மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3000 ஐ தாண்டியது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3000 ஐ தாண்டியது


இந்தியாவில் 3 ஆயிரம் கொரோனா பாதிப்புடையவர்கள் என்ற நிலையை எட்டிய முதல்மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது.
இங்கு பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் மும்பையில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 177 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே இருதயம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நீண்டகால நோய்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை 56 ஆயிரம் பேரின் மாதிரிகளை பரிசோதித்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் முதல் தொழில்துறையினருக்காக சில கட்டுப்பாடுகளைத் தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.