பாடநுால் நிறுவன பணியாளர்கள் ஏப்., 20ம் தேதி முதல் பணி - ஆசிரியர் மலர்

Latest

 




18/04/2020

பாடநுால் நிறுவன பணியாளர்கள் ஏப்., 20ம் தேதி முதல் பணி


சென்னை:பாடப் புத்தக தயாரிப்புக்காக பாடநுால் நிறுவன பணியாளர்கள் ஏப்., 20ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக பாடநுால் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக பாடநுால் மற்றும் கல்வி சேவை கழகத்தின் குரூப் - ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்கள் பிப்., 20ம் தேதி முதல் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும். குரூப் - சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் தங்கள் துறை தலைவர்களின் உத்தரவுக்கு ஏற்ப அலுவலகத்துக்கு வர வேண்டும். ஆனால் 33 சதவீதம் பேர் மட்டுமே
அலுவலகத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

சுகாதாரத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சை
பெற்றவர்கள் இருந்தால்
அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. பணிக்கு வரும் போது அனைத்து அலுவலர்களும் ஊழியர்களும் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.அலுவலகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து விதிகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459