1323 மருத்துவபணியாளர்களுக்கு பணி ஆணை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 25 April 2020

1323 மருத்துவபணியாளர்களுக்கு பணி ஆணை


சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,323 நர்ஸ்கள், பணி நியமன ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்படுவதாக முதல்வர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 1,508 லேப் டெக்னீசியன்கள், 530 டாக்டர்கள், 1000 நர்ஸ்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு,
பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும், மார்ச் 31 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர்கள், நர்ஸ் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
அதேபோன்று, ஏப்.,30ல் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள டாக்டர்கள், நர்ஸ் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு
தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து, தற்போது 1,323 நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.