10 வகையான கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது - விஞ்ஞானிகள் - ஆசிரியர் மலர்

Latest

 




28/04/2020

10 வகையான கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது - விஞ்ஞானிகள்

மும்பை
கொரோனா வைரஸில் 10 வகை இருப்பதும், அதில் ஏ2ஏ என்ற ஒரு வகை வைரஸ் மட்டுமே தற்போது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள தேசிய உயிர் மரபியல் ஆராய்ச்சிக் கழகத்தைச் (National institue of Biomedical Genomics)சேர்ந்த விஞ்ஞானிகள் நிதன் பிஸ்வாஸ், பார்த்தா மஜீம்தார் ஆகியோர் 55 நாடுகளில் இருந்து 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர். அதில், ஓ, ஏ2, ஏ2ஏ, ஏ3, பி, பி1 என 10 வகையான கொரோனா
வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பது தெரியவந்திருப்பதாக கூறியுள்ளனர். 
ஏ2ஏ மரபணு மாற்ற வைரஸ் அதிக எண்ணிக்கையில் நுரையீரலுக்கும் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. தொற்று பரவ அதிக திறன் வாய்ந்ததாக இருப்பதால், உலக அளவில் இது சர்வசாதாரணமாக பரவுகிறது
இதில், நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ வகை வைரஸ் பரவியிருந்தாலும், அதை தற்போது ஏ2ஏ வைரஸ் பாதிப்பு முந்தியுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், குறைந்த நாட்களில் அதிவேகமாக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த வகை வைரஸ்தான் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பயன்படுத்தப்படும் ஆர்.என்.ஏ சோதனைகளில்  மாதிரி மிகவும் குறைவாக இருந்தாலும் (35), ஆய்வில் ஏ2ஏ 47.5 சதவீத மாதிரிகளில் இருப்பதாகக் காட்டியது.
சுவாரஸ்யமாக, ஏ2ஏ வகை கொண்ட அதிகமான நபர்களுக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு பயண வரலாறு இல்லை. இந்தியாவில் வகை ஏ2ஏ ஆதிக்கம் செலுத்துகிறதா என்பது குறித்த எந்தவொரு முடிவுகளுக்கும், ஆர்.என்.ஏ  சோதனைக்கு கூடுதல் மாதிரிகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்
ஓ என்ற ஆதார வைரசில் இருந்து 10 மரபணு மாற்றம் வைரஸாக உருவெடுத்தாக கூறப்படும் ஆய்வு
, கடந்த மாதம் இறுதியில் இதர மரபணு வைரஸ்களை ஓரம் கட்டிவிட்டு ஏ2ஏ வைரஸ் விஸ்வரூபம் எடுத்து விட்டது என்று தெரிவிக்கிறது.
மேலும், ஒரு வகை கொரோனா வைரசுக்கு கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து, மற்றொரு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளனர்.இந்த ஆய்வு முடிவுகள் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் இதழில் வெளியாகியுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459