உருவானது மயிலாடுதுறை மாவட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




24/03/2020

உருவானது மயிலாடுதுறை மாவட்டம்



நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம்  உருவாக்கப்படுவதாக முதலைச்சர் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.. மயிலாடுதுறையை தலைமையகமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் மக்களின் தேவைக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும்,
வேலூர் மாவட்டத்தை பிரித்து இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. 
இதன் அடிப்படையிலே தற்போது நிர்வாக மற்றும் மக்களின் உதவிக்காக நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, மயிலாடுதுறையை மையமாக வைத்து மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என்று நீண்ட வருட கோரிக்கை இருந்த நிலையில் தற்போது நிறைவேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459