இன்றுடன் பணிநிறைவு பெற இருந்த மருத்துவ பணியாளர்களின் பணி நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இன்றுடன் பணிநிறைவு பெற இருந்த மருத்துவ பணியாளர்களின் பணி நீட்டிப்பு


இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
மேலும், மருத்துவமனைகள் அனைத்தும் தரம் உயர்ந்தபட்டு, போர்க்கால நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை கரோனா வைரஸிற்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது. 
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு, பிற மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் வார்டுகள் என தேவையான
அணைத்து பணிகளும் மும்மரகமாக முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் பணிநிறைவு தேதி வந்துள்ளது. இந்த தேதியுடன் இவர்கள் பணிநிறைவு செய்து செல்ல வேண்டிய சூழ்நிலையில், இதனை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள
நிலையில், இன்றுடன் பணிநிறைவு பெற இருந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட செவிலியர்களின் பணி நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 
வரும் இரண்டு மாதத்திற்கு இவர்களின் பணி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஒப்பந்த முறையில் இரண்டு மாதம் பணியாற்ற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநலன் கருதி அரசு எடுத்துள்ள முடிவிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.