ஊரடங்கு உத்தரவு: என்ன இருக்கும்என்ன இருக்காது ? என்ன செய்யவேண்டும்? விரிவான பார்வை .... - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஊரடங்கு உத்தரவு: என்ன இருக்கும்என்ன இருக்காது ? என்ன செய்யவேண்டும்? விரிவான பார்வை ....


இன்னும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கடமைகளை பார்ப்போம்…நேற்று இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள்
ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்ஏற்கனவே தமிழகத்தி; 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இது இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் போது நாடு எப்படி இருக்கும், மக்கள் எப்படி இருக்க வேண்டும் என பார்ப்போம்… என்னென்ன இருக்கும்: அரசு துறையின் தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் வழக்கம் போல செயல்படும்.நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம்,
மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் இயங்கும் ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள், ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள், அம்மா உணவகங்கள் தமிழகத்தில் செயல்படும். மருத்துவமனைகள், மருந்தகங்கள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் செயல்படும்.மருத்துவம் சார்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல இயங்கும். அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனைகளுக்கு அனுமதி உண்டு ரிசர்வ் வங்கி வழிமுறைகளின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படும்.உணவகங்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படும். தேநீர் கடைகள் செயல்படலாம். பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் செயல்படும் லாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் இயங்கும்.
> மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்கள் இயங்கும். 
> தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் செயல்படும்.
> மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது.
> டாஸ்மாக் மதுபானக் கடைகள் முழுவதுமாக மூடப்படும். 
> ரயில், விமான நிலையங்கள் திறந்திருந்தாலும் சேவைகள் இருக்காது.
மக்கள் செய்ய வேண்டியது என்ன: 
> பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்.
> பொது இடங்களில் மக்கள் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை. 
> மார்ச் 16 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்த திருமணங்களை மட்டுமே நடத்த வேண்டும்.
> கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும். 
> முடிந்த வரை வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டில் இருப்பது நல்லது. 
> வீட்டிலும் ஒழுங்கான சுகாதார முறைகளை கைப்பிடிக்க வேண்டும். 
-மக்கள் நலனில் ஆசிரியர்மலர்