கொரோனாவிற்கு மருந்து : மத்திய அரசு அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 23 March 2020

கொரோனாவிற்கு மருந்து : மத்திய அரசு அறிவிப்பு


புதுடெல்லி,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தோற்றுவித்துள்ள, கொரோனா வைரசுக்கான தேசிய சிறப்பு படையானது, மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து பொருளை வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளது.
எனினும், மருத்துவர் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை அளிக்கப்பெற வேண்டும்.  அமெரிக்க அரசு கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்த மருந்து பொருளை முன்பு பரிந்துரை செய்திருந்தது.

No comments:

Post a comment