வேப்பிலை, மஞ்சள் தண்ணீரின் மகத்துவம்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 26 March 2020

வேப்பிலை, மஞ்சள் தண்ணீரின் மகத்துவம்!


வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில்
வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன.

காற்றில் மூலம் பரவும் பூஞ்சை, காளான், பாக்டீரியாக்கள் போன்றவை பரவாமல் காற்றை சுத்தப்படுத்தும் சிறப்பு பணியையும் செய்கிறது வேம்பு.

வேம்பின் வாசனையும், மஞ்சளின் வாசனையும் காற்றில் பரவி பரவசப்படுத்தும். வேப்பிலையும், மஞ்சளும் பெரிய நோய்களில் இருந்து காக்கும்
அருமருந்தாகவும் உள்ளது. மேலும் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதன் மூலம் நோய் பரவாமல் தடுக்கப்பட்டது. வாசலில் மஞ்சள் கலந்த நீரினை தெளிப்பதால் சிறுசிறு வி‌ஷபூச்சிகள், ஈக்கள், கிருமிகள் நிலப்பகுதி வழியே இல்லத்திற்குள் நுழையாது.