நாடு முழுவதும் மார்ச் 31 வரை பயணிகள் சேவை ரத்து - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 22 March 2020

நாடு முழுவதும் மார்ச் 31 வரை பயணிகள் சேவை ரத்து


புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 341 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. 
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. சரக்கு ரெயில் சேவை வழக்கம் போல் செயல்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a comment