மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என சுகாதாரத் துறை இணைச் செயலாளர் - ஆசிரியர் மலர்

Latest

 




16/03/2020

மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என சுகாதாரத் துறை இணைச் செயலாளர்


மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று (திங்கள்கிழமை) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
“பள்ளிகள், நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும். ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், பொதுப் போக்குவரத்துகளைக் குறைக்க வேண்டும், மக்கள் ஒருவருக்கொருவர் 1 மீட்டர் தொலைவைக் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை மார்ச் 31 வரை கடைபிடிக்க வேண்டும். 
ஈரானில் இருந்து 4-ஆம் கட்டமாக 53 பேர் இன்று இந்தியா வந்துள்ளனர். ஜெய்சால்மீரில் உள்ள ராணுவ இடத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் அவர்கள் யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை. நெறிமுறைக்கு உட்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தகவலாக ஒடிஸா, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் கேரளத்தில் இருந்து 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 13 பேர் குணமடைந்தது, 2 பேர் உயிரிழந்தது உட்பட மொத்தம் 114 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன், துருக்கி மற்றும் இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இது மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும். 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் கட்டாயம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாக 5,200-க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459