பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




15/03/2020

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

வேண்டுகோள்
15.03.2029
~~~~~~~
கொரோனா வைரஸ்  காரணமாக     பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் அவர்களை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
===========
முதல் முதலில் சீன நாட்டில் பரவி சீனாவில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 3500கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர், இது படிப்படியாக இந்தியா உட்பட பல நாட்டில் பரவி உலகயே அச்சுறுத்தி வருகிறது , அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடக மற்றும் தலைநகரான டெல்லியில்  வேகமாக பரவியிருக்கிறது

மத்திய அரசை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை தற்காலிகமாக நிறுத்தியது , அண்டை மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறது கொரோனா காரணமாக கர்நாடகாவில் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார்

இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான தர்ம்புரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, வேலூர், மேலும் கேரள மாநில ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் , நீலகிரி, கோயம்பத்தூர்,மற்றும்  திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கர்நாடக கேரள மாநிலங்களை ஒட்டியுள்ளதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாலும் மற்றும் கர்நாடக கேரள மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்து செல்லும் மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும் பாதிக்கும் என்பதால் பெருபாலான மாவட்டங்கள் கேரளா கர்நாடக மாவட்டத்தை ஒட்டியுள்ளதால் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு இந்த மாதம் 31ம் தேதி வரை மற்ற மாநில்ங்களை போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்க வேண்டும்,

 அதே நேரத்தில் பொதுத் தேர்வு எழுதும் பனிரெண்டாம் வகுப்பு , பதினோராம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினியை தெளித்து தேர்விற்கு அனுதிக்க வேண்டும்,

 அதுமட்டம் அல்லாமல் அலுவகங்கள் ரயில்கள், பேருந்துகளிலும் தினந்தோறும் கிருமிநாசினியை தெளித்து இயக்க வேண்டுமென   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
~~~~~~~~

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459